பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 விநியோகம்

கடையம், ஜன. 11:  கடையம் அருகே கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்கம் சார்பில் வீராசமுத்திரம், ரவணசமுத்திரம், கோவிந்தப்பேரி ஆகிய பகுதிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் சுப்பிரமணியின் வரவேற்றார். சங்க தலைவர் உச்சினிமாகாளி தலைமை வகித்து பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

இதில் சங்க இயக்குநர்கள் ராசு, தங்கபாண்டியன், பிச்சையா, அருணாசலம், செய்யது அலி, கல்யாணி, கதிஜா பீவி, சங்க எழுத்தர் முத்துசெல்வி, ஆறுமுகம், யஹ்யா, அன்சாரி, சங்க செயலாளர் ஷாஜகான், விற்பனையாளர் முத்து மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

ஆழ்வார்குறிச்சி கூட்டுறவு சங்கம் சார்பில் 1 மற்றும் 3வது கடைகளில் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், செயலாளர் கந்தசாமி, துணை தலைவர் நெல்லையப்பன், சைலப்பன், சுமன், ஆறுமுகம், ஏ.சைலப்பன், அம்பை தாசில்தார் ராஜேஸ்வரி, தனி தாசில்தார்கள் கந்தப்பன், செலின், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், விஏஓக்கள் சந்தோஷ்குமார், கிருஷ்ணவேணி, விற்பனையாளர்கள் பர்வீன், சைலப்பன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையம் பெரும்பத்து ஊராட்சி மேட்டூர் வெய்க்காலிப்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி -சேலை மற்றும் 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், கூட்டுறவு சங்க துணை தலைவர் டேவிட் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி - சேலை மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டது. கடையம் ஒன்றிய அதிமுக செயலாளர் அருவேல்ராஜ். கூட்டுறவு சங்க இயக்குநர்கள் செல்வராஜ், செல்வன், ஸ்டாலின் வின்சென்ட், தர்மராஜ், கிராம உதவியாளர் முருகேஷ்வரி, விற்பனையாளர் கோபால், மாரிமுத்து மற்றும் நாராயணன், சிம்சோன் தேவதாசன், சிவநேசன், தோப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுரண்டை  கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களுடன் ஆயிரம் ரூபாயை செல்வமோகன்தாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வீ.கே.புதூர் தாசில்தார் நல்லையா, வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கூட்டுறவு பதிவாளர் முதுநிலை ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்டக சாலை செயலாளர் சரவணகுமார் வரவேற்றார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள், ரூ.1000 வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அதிமுக செயலாளர் அமல்ராஜ், நகர செயலாளர் சக்திவேல், இயக்குநர் முத்துராஜ், ராதிகா, பேச்சிமுத்து, பாண்டியன், ஆடிட்டர் முத்துராஜ், முன்னாள் கவுன்சிலர் இந்திரா அழகுதுரை, பழனிசங்கர் மற்றும் ஜவகர் தங்கம், குலையநேரி அருணாசலம், முத்தையா, திருமலை கனி, ஜெயபிரகாசம், நகர அவைத்தலைவர் முருகையா, கோபால், ராஜேஷ், செல்வம், ஆறுமுகம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரெட்டைகுளம், வீராணம் பகுதியிலும் பொங்கல் தொகுப்பை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Related Stories: