சேரன்மகாதேவி கோயில்களில் தீர்த்தவாரி-தெப்பத் திருவிழா

வீரவநல்லூர், ஜன. 11:  சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி விழா மற்றும் ராமசாமி கோயிலில் தெப்பத்திருவிழா நடந்தது.

சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பக்தவச்சல பெருமாள் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நவநீதகிருஷ்ண சுவாமி கோயில்களில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரி விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு புனித நீராடினர். இதேபோல் சேரன்மகாதேவி ராமசாமி கோயிலில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு சாற்றுமுறை தீர்த்தம் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு திருவீதி உலா, இரவு 8 மணிக்கு தெப்ப திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பக்த பேரவையினர் செய்திருந்தனர்.

Related Stories: