வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம் களக்காடு பள்ளி விழாவில் வசந்தகுமார் எம்எல்ஏ பேச்சு

களக்காடு, ஜன. 11: வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம் என்று களக்காடு அரசு பள்ளியில் நடந்த விழாவில் வசந்தகுமார் எம்எல்ஏ பேசினார். களக்காடு  அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெய்சிங் மால்ராஜ்  தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி வரவேற்றார். 387  மாணவ, மாணவிகளுக்கு வசந்தகுமார் எம்எல்ஏ இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது: ஆசிரியர்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் மாணவ, மாணவிகளின்  வெற்றிக்கு உழைக்கின்றனர். மாணவ, மாணவிகள் முடியாது  என்ற சொல்லை தவிர்த்துவிட்டு, எதையும் முடித்து காட்டுவேன் என்ற  தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு  தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம், என்றார்.

தமிழாசிரியர் சேக் முகைதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  ஆசிரியர் சுந்தரராமன் நன்றி கூறினார். இதேபோல் களக்காடு கே.ஏ.எம்.பி  மீரானியா மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் பீர்முகம்மது  தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் யாகத் அலிகான் வரவேற்றார். 139 பேருக்கு இலவச சைக்கிள்களை  வசந்தகுமார் எம்எல்ஏ வழங்கினார். தொடர்ந்து  பள்ளியில் புதிய நூலகம் கட்ட சொந்த நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம்  வழங்கினார். விழாவில் பள்ளி துணை தலைமை ஆசிரியர் நாகூர்மீரான், நெல்லை  கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமாார், நகர தலைவர் ஜார்ஜ்வில்சன், மாவட்ட சிறுபான்மை  பிரிவு துணை தலைவர் பீர்முகம்மது, மாநில செயற்குழு உறுப்பினர்  கிருஷ்ணகுமார், சேகர், நாங்குநேரி நகர தலைவர் சுடலைக்கண்ணு உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

தொடர்ந்து களக்காடு யூனியன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தாலிக்கு  தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பேருக்கு தலா 1 பவுன் தங்கத்தையும் வசந்தகுமார் எம்எல்ஏ வழங்கினார். இதேபோல் புளியரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிமுக மாணவரணி செயலாளர் முருகேசன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கோமதி ராஜா, தலைைம ஆசிரியை இந்திராபாய் ஆகியோர் 139 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர்.

Related Stories: