குடியாத்தம் அருகே கரும்பு தோட்டத்தில் தீ

குடியாத்தம், ஜன.11: காட்பாடி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. குடியாத்தம் அடுத்த சின்னதோட்டாளம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த கரும்பு தோட்டம் திடீரென தீப்பற்றி தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதையறிந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கரும்பு தோட்டம் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

× RELATED குடியாத்தம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சம்