கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

சோளிங்கர், ஜன.11: சோளிங்கர் அடுத்த எழும்பி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை பின்புறம் உள்ள கிணற்றில் தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து கிடந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன்பேரில், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி மானை உயிருடன் மீட்டனர். அப்போது, மானுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மானுக்கு சிகிச்சை அளித்து நாகபூண்டி காப்பு காட்டில் விட்டனர்.

× RELATED கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி