திமுக கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் ஊராட்சி சபை கூட்டத்தில் தீர்மானம்

பேராவூரணி, ஜன. 10: பேராவூரணி அருகே உள்ள பெரியநாயகிபுரம் ஊராட்சி   ஆவணத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது.
திமுக ஊராட்சி செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமணிக்கம், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன்  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தென்னை மரங்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற அயராது பாடுபடுவது. உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேராவூரணி ஒன்றிய பொருப்பாளர் அன்பழகன், பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய முன்னாள் தலைவர்கள் பழனிவேல், ராஜரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் வடக்கு முத்துமாணிக்கம், தெற்கு ரவிச்சந்திரன் மாவட்ட துனை செயலாளர் செல்வராஜ், பேராவூரணி நகர செயலாளர் நீலகண்டன் பங்கேற்றனர். அபுபக்கர் நன்றி கூறினார்.
ஒரத்தூரில்

× RELATED உள்ளாட்சி தேர்தலிலும் திமுக-...