515 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 10: தஞ்சை மாவட்டம் ஒரத்தூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் ஒரத்தூர், நத்தமங்கலம் கிராம குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க விழா நேற்று நடந்தது. சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். திருவையாறு நிலவள வங்கி துணைத்தலைவர் கலியமூர்த்தி, ஒரத்தூர் ஜெயராமன், நத்தமங்கலம் கரிகாலன் முன்னிலை வகித்தனர். திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி, பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். ஒரத்தூரில் 340 பேருக்கும், நத்தமங்கலத்தில் 175 பேருக்கும் வழங்கப்படுகிறது. சங்க துணைத்தலைவர் பிரகலாதன் நன்றி கூறினார்.

× RELATED கலெக்டரிடம் பொதுமக்கள் மனு...