இலவச வெள்ளாடு வழங்காததால் எருமைப்பட்டியில் மக்கள் மறியல்

பாபநாசம், ஜன. 10: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடியை சேர்ந்தவர்களுக்கு இலவச வெள்ளாடுகள்  வழங்கப்படவுள்ளது.
இதில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி  மருத்துவக்குடி- திருப்புறம்பியம் சாலை எருமைப்பட்டியில் ரவி என்பவர்  தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல்  அறிந்ததும் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்துக்கு வந்து  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை  மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால்  45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

× RELATED மக்களின் பிரச்னைகளுக்கு பாமக தொடர்ந்து போராடும்: ராமதாஸ் பேச்சு