பணியில் இருக்கும் போலீசை கண்காணிக்க பட்டன் காமிரா

திருச்சி, ஜன.10: திருச்சியில் பணியில் இருக்கும் போலீசை கண்காணிக்க பட்டன் காமிரா பொருத்தப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழக காவல் துறை காவல் முன் நடத்தை சரிபார்ப்புசேவை என்ற புதிய இணையவழி சேவையினை நேற்று அறிமுகப்படுத்தியது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற  இணையதளத்தின் வாயிலாக பின்வரும் சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தனி நபர் விவரம் சரிபாரிப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம், வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு, மேற்படி சேவையினை பயன்படுத்துவதற்காக தனி நபர் விண்ணப்ப கட்டணமாக ரூ.500ம், நிறுவனத்திற்கு ரூ.1000மும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த சேவையை திருச்சியில் நேற்று துவக்கி வைத்த மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நிருபர்களிட் கூறும்போது, இந்த சேவை தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாளில் காவல் முன் நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும்.

இந்த விவாசரணையின்போது தவறான தகவல் கொடுத்தால் அது தண்டனைக்கு உரிய குற்றமாகும். விண்ணப்பத்தில் குறைபாடு இருந்தால் நிராகரிக்கப்படும். திருச்சி மாநகரில் தற்போது 2,500 சிசிடிவி கேமராக்கள் காவல்கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு மையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் 1000 காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் 700 பணி முடிந்து விட்டது. மீதம் உள்ள 300 கேமராக்கள் பொருத்தும் பணி வரும் மார்ச்சுக்குள் முடிவடையும்.

அதிக அளவு காமிரா பொருத்தப்பட்டுள்ளதால் 5 ல் 3 வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். திருச்சியில் விரைவில் போக்குவரத்து பூங்கா செயல்படும். பணியில் இருக்கும் போலீசாரை கண்காணிக்கும் வகையில் பட்டன் காமிரா பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி மாநகரில் தற்போது 2,500  சிசிடிவி கேமராக்கள் காவல்கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு  மையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் 1000  காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் 700 பணி முடிந்து  விட்டது. மீதம் உள்ள 300 கேமராக்கள் பொருத்தும் பணி வரும் மார்ச்சுக்குள்  முடிவடையும்.

Related Stories: