தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருச்சி, ஜன 10: முக்கொம்பு கொள்ளிடத்தில் இருவழி சாலை வசதியுடன் புதிய பாலம் கட்டி தர வேண்டும் என தமிழ்நாடு விசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 23வது மாநாடு உறையூரில் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநாட்டில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள வரைவு திட்டத்திற்கான அனுமதியை திரும்ப பெற வேண்டும்.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமனம் செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணதொகை போதுமானதாக இல்லை. கூடுதலாக நிவாரண தொகை அறிவிக்க வேண்டும்.

முக்கொம்பு கொள்ளிடத்தில் கட்டப்படவுள்ள புதிய கதவணை பாலத்தை மாயனூர் கதவணை பாலம் போல் - இருவழி சாலை வசதியுடன் கூடிய பாலமாக கட்டி தர வேண்டும். முசிறி, தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம், ஒன்றியங்களின் 293 ஊரக குடியிருப்புகளுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும்.காவிரியில் தொட்டியம் வட்டம் மகேந்திர மங்களம்-லாலாப்பேட்டை (கரூர்), முசிறி தாலுகா திருங்கோயங்கமலை-மணத்தட்டை (கரூர்), ஸ்ரீரங்கம் தாலுகா பெட்டவாய்த்தலை-  அய்யம்பாளையம், ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை-குணசீலம், திருவெறும்புர் தாலுகா வேங்கூர்-உத்தமர்சீலி ஆகிய இடங்களிலும் கொள்ளிடத்தில் நொச்சியம்- ரங்கம், கூகூர்-கிளிக்கூடு ஆகிய இடங்களில் கதவணைகள் அல்லது தடுப்பணைகள் அமைத்திட வேண்டும். காவிரி- சரபங்கா ஆறு திருமணி முத்தாறு - கழைப்பட்டானாறு அய்யாறு தளுகை ஆறு, மாவடியான் ஓடை, கீரம்பூர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

வையம்பட்டி பொன்னணியாறு அணையை முற்றிலும்  தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். படைபுழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காசோளம் பயிர் சாகுபடியாளர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். காவிரி பாசன பகுதிகளுக்கு கோடை நெல் சாகுபடிக்கும்  வாழை, கரும்பு, மஞ்சள், கோரை உள்ளிட்ட ஆண்டு பயிர்களுக்கும் மே மாதம் இறுதி வரை தண்ணீர் பெற்றுத் தரவேண்டும். உய்யக்கொண்டானில் புலிவலம் மணல்போக்கியில் துவங்கும் கொடிங்கால் வடிகால், கொடியாலம் புலிவலம் இடையே உள்ள ராமவாத்தலை வடிகாலான வக்கணாங்கொத்துவடிகால் ஆகியவற்றை தூர்வார வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மேக்குடி கீழ்பத்து வரை பேருந்து வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள்  வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) பொன்னுசாமி, சங்கத்தின் மாநில துணை  செயலாளர் இந்திரஜித், மாவட்ட செயலாளர் அயில சிவசூரியன் கலந்து கொண்டு  பேசினர்.

மாநாட்டில் 39 போ் கொண்ட மாவட்ட குழு தோ்வுசெய்யப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ப

டைபுழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காசோளம் பயிர் சாகுபடியாளர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். காவிரி பாசன பகுதிகளுக்கு கோடை நெல் சாகுபடிக்கும்  வாழை, கரும்பு, மஞ்சள், கோரை உள்ளிட்ட ஆண்டு பயிர்களுக்கும் மே மாதம் இறுதி வரை தண்ணீர் பெற்றுத் தரவேண்டும்.

Related Stories: