திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஆத்தூர், ஜன.10: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் முள்ளுவாடியில் நகர செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும். நகரத்தில் உள்ள 33 வார்டுளிலும் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி கொண்டாடப்பட வேண்டும். வரும் 24ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால் முகவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தொய்வின்றி ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முல்லை.பன்னீர்செல்வம், முன்னாள் நகரமன்ற தலைவர் பூங்கொடி, நகர துணை செயலாளர் ராமச்சந்திரன், ஸ்டீல்ராஜா, வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜாமணி, ராஜசேகர், கமால்பாஷா, காசியம்மாள், தங்கவேல், நாகராஜன், செந்தில்குமார், கூட்டுறவு முன்னாள் தலைவர்கள் மாணிக்கம், தாமரைச்செல்வன், கோட்டை குமார், மாணவரணி பர்கத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED கெங்கவல்லி அருகே திமுக பொதுக்கூட்டம்