நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த வெள்ளிப்பட்டறை அதிபர் கைது

சேலம், ஜன.10: சேலம் அருகே  அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ளெ்ளிப்பட்டறை உரிமையாளரை போலீசார் கைது  செய்தனர்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள பெருமாம்பட்டி வலியன்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (35), வெள்ளி மற்றும் தறி பட்டறை அதிபர். இவர் அனுமதியில்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக இரும்பாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று லட்சு மணனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் யாரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கினார்? துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


× RELATED ஓமலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்