வகுப்பை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், ஜன.10: ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில், சுமார் ஆயிரத்துக்கும் ேமற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை  வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள், கல்லூரி முன்பாக  திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தொடக்கப்பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED கல்லூரி மாணவர்கள் பேரணி