காவிரியில் மீன்பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி பலி

பரமத்திவேலூர், ஜன.10: கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல்(55). இவர் நேற்று மதியம், பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பாலத்தின் ஒன்பதாவது தூண் அருகே, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கிருந்த மீனவர்களின் உதவியுடன் தங்கவேலை தேடும் பணி ஈடுபட்டனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள களிமேடு பகுதியில் தங்கவேலின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED தினகரன் செய்தி எதிரொலி தீப்பந்தம்...