திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் செங்குட்டுவன் எம்எல்ஏ., பங்கேற்பு

கிருஷ்ணகிரி, ஜன.10:  கிருஷ்ணகிரி ஒன்றியம் சிக்கபூவத்தி கிராமத்தில் “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்” என்ற முழக்கத்துடன் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது.  கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர். காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், சிக்கப்பூவத்தி, பூவத்தி, உப்புக்குட்டை, கொடுகூர், மிட்டப்பள்ளி, கெட்டூர், மூங்கில்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய பொதுமக்கள், திமுக ஆட்சியில் இருந்த பெற்று வந்த முதியோர் உதவித்தொகை கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த பகுதியில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் உரிய வேலை இல்லாமல் பெயின்டர்களாக பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் முழுமையாக இப்பகுதி பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.  இதுபோன்ற குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார். கூட்டத்தில் செங்குட்டுவன் எம்எல்ஏ., பேசுகையில், தமிழகத்தில் தற்போது கமிஷன் ஆட்சி நடந்த வருகிறது. அனைத்து பணிகளுக்கும் கமிஷன் கொடுத்தால் மட்டுமே அந்த பணி நடைபெறும் என்ற நிலை தற்போது உள்ளது. இதுபோன்ற அவல நிலை மாறி, அனைத்து மக்களும் எவ்வித பிரச்சனையுமின்றி வாழ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைந்து அணிவகுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மாவ ட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சாந்தமூர்த்தி, கோவிந்தன், பேரூர் செயலாளர் பாபு, சிக்கபூவத்தி ஊராட்சி செயலாளர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, கண்மணி, அணிகளின் துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், வேல்மணி, அஸ்லம், ராஜசேகரன், ஆறுமுகம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வாசுதேவன், முன்னாள் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  
தேன்கனிக்கோட்டை:  தளி சட்டமன்ற தொகுதி கொமாரணப்பள்ளி, பேளகொண்டப்பள்ளி ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலுரெட்டி தலைமையில் நடந்தது.

வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், மாணவரணி அமைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ ஊராட்சி சபை கூட்டங்களை துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய அவைத்தலைவர் கிரிஸ், துணை செயலாளர் மஞ்சுநாத், பொருளாளர் மஞ்சு, தகவல் தொழில்நுட்ப அணி ரவி, வினோத், வேணு, மல்லிகார்ஜூனா, சந்திரப்பா, சிவசங்கர், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

× RELATED கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு...