மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல் 290 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜன.10:  கிருஷ்ணகிரியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்த சாலை மறியலில் ஈடுபட்ட 290 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே, அண்ணாசிலை எதிரில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள், வாலிபர், மாதர் அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட செயலாளர் பீட்டர், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், அனைத்து இந்திய விவசாய சங்க செயலாளர் பிரகாஷ், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.  

இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., ஏஐடியூசி மாவட்ட தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமசந்திரன், தொமுச பேரவை செயலாளர் கிருஷ்ணன், சிஐடியூ மாவட்ட துணை தலைவர் குமுதன் ஆகியோர் சிறப்பரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தொமுச நகர கிளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன், தொமுச புறநகர் கிளை நிர்வாகிகள் வாசுதேவன், பொன்னுசாமி, முனிரத்தின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தில் சேர்த்து வைத்த, பிடித்தம் செய்த தொகையினை கையாடல் செய்வதை கண்டித்தும், தொழிலாளர் குறைந்தபட்ச மாத ஊதியம் பஞ்சப்படியுடன் ₹18 ஆயிரம் வழங்க வேண்டும். ஓசூரில் பி.எப் கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டு பெங்களூர்-ரவுண்டானா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 290 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் : ஓசூர் ரயில் நிலையம் முன், பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பாகலூர் பகுதி அமைப்பாளர்  ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். சங்கர் நன்றி கூறினார். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை : ஊத்தங்கரை அண்ணா சிலை 4 ரோடு பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, சிஐடியூ, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேருந்துகளை வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர்.

× RELATED முதல்வர் யோகி பற்றி செய்தி...