கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி, ஜன.10:  கிருஷ்ணகிரியில் நாளை (11ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (11ம் தேதி) காலை 10.30 மணியளவில் நடை பெறவுள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஓசூர், கிருஷ்ணகிரியை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டெய்லரிங் (தெரிந்தவர்கள், விருப்பமுள்ளவர்கள்), 18 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு முகாம் நடைபெறும் நாளில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். 

× RELATED கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்