காய்கறி பதப்படுத்தும் நிலையத்தை வேளாண் வணிக ஆணையர் ஆய்வு

காவேரிப்பட்டணம், ஜன.10:  காவேரிப்பட்டணத்தில் காய்கறி, பழங்களை சேமித்து வைக்க  முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை, வேளாண் வணிக ஆணையர் சன்ஜோங்கம் ஜடாக்சிரு, மாநில விவசாய சங்க தலைவர் ராமகவுண்டர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, ஆணையர் சன்ஜோங்கம் ஜடாக்சிரு கூறுகையில், ‘கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதை தடுக்கவும், அதிக லாபம் பெறும் நோக்கத்திலும், காவேரிப்பட்டணத்தில் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் ராமமூர்த்தி, செயலாளர் கோபிநாத், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் வானதி, பரமசிவம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED காய்கறி பதப்படுத்தும் நிலையத்தை வேளாண் வணிக ஆணையர் ஆய்வு