சூளகிரி தாலுகாவில் சிப்காட் நிலம் எடுப்பு ஆலோசனை கூட்டம்

சூளகிரி, ஜன.10:  சூளகிரி தாலுகா அலுவலகத்தில், 3வது சிப்காட் நிலம் எடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. சூளகிரி தாலுகா நல்லகானகொத்தபள்ளி, குண்டுகுறுக்கி, ஜங்கமா நகர் பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலம், சிப்காட் இடத்துடன் உள்ளது. இதில், சிப்காட் அமைக்க 2014-2015ம் ஆண்டுகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் படிப்படியாக குறைந்து 568 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இவ்வாறு தேர்வு செய்த நிலங்களில் வீடுகள் அமைந்துள்ளது. இதனால் நிலம் எடுப்புக்கான ஆலோசனை கூட்டம், நேற்று சூளகிரி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். இதில், தாசில்தார்கள் முருகேசன், பாபு, கல்யாணசுந்தரம், ராஜேந்திரன், ராமசந்திரன், நில அளவர் அன்பழகன், சிறப்பு தாசில்தார் ரெஜினா, வருவாய் அலுவலர் வெற்றிவேல் மற்றும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர், சிப்காட் நிலத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடுகள் உள்ளதால், நிலத்தை கையகப்படுத்த கூடாது என கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

× RELATED ஊட்டி தாலுகா அலுவலத்தில் ஜமாபந்தி