தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கோவை, ஜன. 10: மத்திய அரசு தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என கூறி சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐசிடியு உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் 2வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்நிலையில், நேற்று தபால் ஊழியர்கள் கோவை தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஸ்ரீதர், சிவசண்முகம், வெங்கடேஷ், அமைப்பு செயலாளர்கள் பாபு, தனபால், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். தபால் ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மெயில் சர்வீஸ் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் தேங்கி கிடக்கிறது. தபால்நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட தபால்கள் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், இரண்டு நாள் போராட்டம் காரணமாக தபால் வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இரண்டு நாள் போராட்டம் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று முதல் வங்கிகள், தபால்நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.


× RELATED தொலைதொடர்பு ஊழியர்கள் வேலைநிறுத்த விளக்க கூட்டம்