பவானி ஆற்றில் மணல் கடத்திய 3 பேர் கைது

ஈரோடு, ஜன. 10:    ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே காசிபாளையம் கிருஷ்ணா நகர் பவானி ஆற்றில் நேற்று முன்தினம் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், தடப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கோபால் (36) சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு 2 மாட்டு வண்டிகளில் 3 பேர் மணல் அள்ளியது தெரிய வந்தது. இதுகுறித்து வி.ஏ.ஓ., கோபால் கடத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், கடத்தூர் போலீசார் காசிபாளையம் அருணாசலம் வீதியை சேர்ந்த காளியப்பன் (41), காசிபாளையம் காந்தி நகரை சேர்ந்த சின்னவன் (45), பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்த பிரகாஷ் (எ) பழனிச்சாமி (42) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 மாட்டு வண்டிகள், ஒரு யூனிட் மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

× RELATED பவானி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது