ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 24 புதிய பஸ்கள் இயக்கம்

ஈரோடு, ஜன. 10:     தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்தின் சார்பில் புதிய பஸ்கள் துவக்க விழா நிகழ்ச்சி நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி புதிய பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி., சக்திகணேசன், ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,ராமலிங்கம், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சேனாதிபதி, முன்னாள் மண்டலக்குழு தலைவர் மனோகரன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த புதிய பஸ்கள் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, சத்தி, ராசிபுரம், நாமக்கல், கோவை, உடுமலை ஆகிய பகுதிகளுக்கும், கோவையில் இருந்து சேலம், அந்தியூரில் இருந்து கோவை, சேலம், காரைக்குடி, சத்தியில் இருந்து தேனிக்கும், கோபியில் இருந்து மதுரை, தேனிக்கும், நம்பியூரில் இருந்து மதுரைக்கும், திருப்பூரில் இருந்து சேலத்திற்கும் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

× RELATED தேனி பஸ்ஸ்டாண்டில் சிக்கித் தவிக்கும் பஸ்கள்