.மணல் கடத்திய மூன்று பேர் கைது

சிவகங்கை, ஜன.10: சிவகங்கை அருகே மணல் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியில் மணல் ஏற்றிச்செல்லும் லாரி குறித்து தகவல் கிடைத்த விஏஓ கவுரிசங்கர் சிவகங்கை டவுன் போலீசில் புகார் அளித்தார். அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார் மணல் ஏற்றி வந்த லாரியை பிடித்தனர். லாரியை ஓட்டி வந்த பில்லூரை சேர்ந்த ராஜூ(46) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.இதுபோல் வாணியங்குடி பகுதியில் மணல் கடத்தி வந்த லாரியை பிடித்த சிவகங்கை டவுன் போலீசார் விஏஓ சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து மானாமதுரை அருகே கல்குறிச்சியை சேர்ந்த விக்னேஸ்வரன்(22), அஜய்சூர்யா(22) ஆகிய இருவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.


× RELATED வெளிமாநில சுற்றுலா செல்லும் முதியவர்கள்