இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 422 பேர் கைது

ராமநாதபுரம், ஜன.10:  பொதுவேலை நிறுத்தத்தின் இரண்டாவது  நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்ட 422 பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிசங்கங்கள் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. வேலை நிறுத்தத்தின் 2வது நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள், பணியாளர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடின. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் அரண்மனை வீதியில் சிஐடியூ மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் சிவாஜி, குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உட்பட 97 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டதாக மாவட்ட அளவில் கமுதியில் 6 பெண்கள் உள்பட 52 பேரும், சிக்கல் பகுதியில் 20 பெண்கள் உள்பட 96 பேரும், பரமக்குடியில் 8 பெண்கள் உள்பட 127 பேரும், ராமேஸ்வரத்தில் 20 பெண்கள் உள்பட 50 பேரும் கைது செய்யப்பட்டனர். மாவட்ட அளவில் 17 ஆயிரம் அரசு பணியாளர்களில் 662 பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை மண்டலத் தலைவர் ரவிச்சந்திரன், செயலர் சண்முகவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ரயில்வே துறை காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டனர்.
ராமேஸ்வரம் மேலத்தெருவில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருந்து தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஊர்வலம் துவங்கியது. தமிழ்நாடு மீன்பிடி தொழிசங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் என்.பி.செந்தில், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி முருகானந்தம், எல்.பி.எப்., நிர்வாகி மீனாட்சி சுந்தரம் மற்றும் சந்தானம், மோகன்தாஸ் வடகொரியா உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
மேலத்தெரு, நடுத்தெரு வழியாக சென்ற ஊர்வலம் மேற்குரத வீதியில் உள்ள இந்தியன் வங்கியை சென்றடைந்தது. தொடர்ந்து வங்கியின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உட்பட 76 பேரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி மின் வாரிய அலுவலகத்தில்

× RELATED புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்