புரோக்கர்கள் தொல்லை தாங்க முடியல ; பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு

பரமக்குடி, ஜன.10: பரமக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பொதுமக்களின் தேவைகளை சரி செய்து கொடுப்பதாக, பணம் பறிக்கும் புரோக்கர்கள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பரமக்குடி மின்சார வாரிய அலுவலகம் காட்டுபரமக்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ளது. இங்குள்ள அலுவலகத்தில், பரமக்குடி நகர், நயினார்கோவில், போகலூர் மற்றும் பரமக்குடி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மின்சார சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களின் மின்சாரம் சார்ந்த பணிகள், புதிய இணைப்பு, விவசாயத்திற்கான மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். அப்படி தேவைகளுக்காகவும், புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களை, அலுவலக வளாகத்தில் சுற்றி தெரியும் சில புரோக்கர்கள் தங்கள் வளையில் சிக்க வைத்து பணம் பறித்து வருகின்றனர்.
புதிய இணைப்புக்கு வரும் பொதுமக்களை எலெக்ட்ரிசியன் என்ற போர்வையில் இருக்கும் புரோக்கர்கள், பதிவு மூப்பு அடிப்படையில் இணைப்பு கொடுப்பதால் உங்களுக்கு கிடைக்காது. நான் பார்த்து கொள்கிறேன் என்ற உத்தரவாதத்துடன் பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலையை கச்சிதமாக முடித்து கொடுக்கின்றனர். இணைப்பு வாங்க முடியாது என்று பயனாளிகளை பயத்தை காட்டி, விண்ணப்பத்தினை பெற்று தங்களுக்கு சாதகமாக உள்ள சில அதிகாரிகளின் துணையுடன் முடித்து கொடுக்கின்றனர். இதற்கு மின்சார வாரியத்திற்கு கட்டவேண்டிய பணத்தை விட அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று பல மடங்கு பணத்தை பொதுமக்களிடமிருந்து கறந்து விடுகின்றனர். புரோக்கர்கள் சிலர் அலுவலகத்தின் உள்ளே சுற்றி திரிவது தெரித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். சில சமயங்களில் புரோக்கர்கள் பொதுமக்களிடம் ஏதாவது சாக்குபோக்கு செல்லி ஏமாற்றி வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து காந்திநகர் வீரபாண்டி கூறுகையில், ‘‘பரமக்குடி மின்சார வாரியத்தின் அலுவலகத்தில் புரோக்கர் தொல்லை அதிகரித்து வருகிறது. அங்கு வரும் பொதுமக்களை அலுவலகத்திற்குள்ளேயே போக விடாமல் வழிமறித்து விடுகின்றனர். எதற்கு வந்துள்ளனர் என்று கேட்டு காரியத்தை முடித்து தருவதாக செல்லி, பணம் பறித்து வருகின்றனர். இதற்கு அங்குள்ள அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளிடம் சென்றால் மறியாதை இல்லாததால் பணம் கொடுத்து புரோக்கர்கள் மூலம் வேலையை முடித்து கொள்கின்றனர். ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து புரோக்கர்களை அலுவலகத்திற்குள் அனுமதிப்பதை தடுக்கவேண்டும்’’ என்றார்.
சாயல்குடி அருகே

× RELATED முதியோர்களை குறிவைத்து நகை, பணம்...