பயிர்காப்பீடு வழங்கக்கோரி மறியல்

சாயல்குடி, ஜன.10: பயிர்காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக் கோரி சிக்கலில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர் வறட்சி ஏற்பட்டு, விவசாயம் பொய்த்து போனதால் பயிர்காப்பீடு திட்டத்தில் பிரிமியம் செலுத்திய விவசாயிகளுக்கு 2017-2018 மற்றும் 2018/2019 ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீடு தொகை வழங்கவேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்யவேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.சாயல்குடி அருகே சிக்கல் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலுக்கு சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் சிவாஜி தலைமையும், தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் மயில்வாகணன் முன்னிலையும் வகித்தனர். வாலிநோக்கம் அரசு உப்பள தொழிலாளர் சங்க தலைவர் பச்சமாள் வரவேற்றார். சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

× RELATED விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்