மணல் திருட்டு 2 வாகனங்கள் பறிமுதல்

சாயல்குடி, ஜன.10: சாயல்குடி அருகே அனுமதியின்றி மணல் திருடிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சாயல்குடி அருகே தத்தங்குடி கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக சிக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஒரு ஜே.சி.பி இயந்திரம், ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர், தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பரமக்குடி சப்.கலெக்டரின் மேல்நடவடிக்கைகாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.× RELATED தாரமங்கலத்தில் ₹1.8 லட்சம் பறிமுதல்