கழிவுநீரால் கொசு தொல்லை அதிகம் மாணவர்கள் புகார்

ராமநாதபுரம், ஜன.10:  ராமநாதபுரம் அரசு பிற்பட்டோர் கல்லூரி விடுதி பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் கூறினர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகப் பகுதியில் அரசு பிற்பட்டோர் கல்லூரி விடுதி உள்ளது. இதில் அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியை சுற்றிலும் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், அங்கு தங்கியுள்ள மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைவில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து விடுதி மாணவர்கள் கூறுகையில், கழிவுநீர் செல்வதற்கான வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமல் உடைந்து விட்டது. அதனால் கழிவுநீர் விடுதியை சுற்றி தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுநீரால் கொசு தொல்லை அதிகம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை என்று கூறினர்.

× RELATED ஆவடி நகராட்சி பள்ளியில் கழிவுநீர்,...