அனுமதியின்றி மது விற்றவர் கைது

தொண்டி, ஜன.10: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக போலீசாரின் தீவிர வேட்டையால் அனுமதியின்றி மதுபானம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.தொண்டி அருகே காரங்காடு அமல அன்னை ஆலயத்தின் பின்புறம் அனுமதியில்லாமல் மதுபானம் விற்றதாக கிடைத்த தகவலையடுத்து, தொண்டி எஸ்.ஐ சிலைமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு அலன்(35) என்பவர் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். தொண்டியில் தொடர்ந்து அனுமதியில்லாமல் மதுபானம் விற்றவர்களை கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

× RELATED மது குடித்து விட்டு தூங்கிய தொழிலாளி சாவு