கந்தர்வகோட்டையில் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்ற அதிகாரி உத்தரவு

கந்தர்வகோட்டை,  ஜன.10:  கந்தர்வகோட்டையில் வெள்ளை முனியன் கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற செயல் அலுவலர் உத்தரவிட்டார். கந்தர்வகோட்டையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான வெள்ளைமுனியன்  கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றியுள்ள கோயில் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு  செய்து கடைகள் வைத்துள்ளனர் என புகார் வந்ததன் பேரில் செயல் அலுவலர் மேனகா  நேற்று நேரில் வந்து பார்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்த கடைகள் வைத்திருந்த  மீன் கடைகளை அகற்ற வலியுறுத்தினார். மேலும் கோயில் திடலில் மர அறுவை  மில் நடத்தி வருபவர்கள் தங்களது மரங்களை போட்டு வைத்துள்ளனர். அவற்றை  அகற்றவும் உத்தரவிட்டுள்ளார். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறநிலைத்துறை  செயல் அலுவலர் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

× RELATED சென்னை பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு...