அனுமதியின்றி மது விற்றவர் கைது

கறம்பக்குடி, ஜன.10: கறம்பக்குடி முள்ளனகுறிச்சி  அருகே சாந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (42). இவர் அனுமதியின்றி மது விற்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு வந்த தகவலையடுத்து எஸ்ஐ பெரியசாமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவானந்தம் சாந்தம்பட்டி அய்யனார் கோயில் அருகே விற்பனை செய்து கொண்டிருந்த சிவானந்தத்திடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சிவானந்தத்தை கைது செய்து கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
× RELATED அனுமதியின்றி மது விற்றவர் கைது