மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருள் வழங்கல்

பொன்னமராவதி, ஜன.10:   பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிப்பட்டது.அட்சயா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் முகமதுகாசிம் தலைமை வகித்தார். திருமயம் எம்எல்ஏ ரகுபதி மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா, திமுக ஒன்றியச்செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, நகரச்செயலாளர் அழகப்பன், மாநில துணைத்தலைவர் பெருமாள், அமைப்பு செயலாளர் பிரபு, துணை பொதுச்செயலாளர் விநாயகம், மாவட்ட செயலாளர் சிலம்பன், சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சாயிதாபானு, கயல்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.× RELATED காட்சி பொருளான குப்பை தொட்டிகள்