கீரமங்கலத்தில் இலக்கிய அணி சார்பில் திமுகவின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் துண்டுபிரசுரம்

ஆலங்குடி, ஜன.10: ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் திமுக ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக செய்யப்பட்ட சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, நகர செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். திருவரங்குளம் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தங்கமணி, ஞான.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணேசன் வரவேற்றார். ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன், திருமயம் தொகுதி எம்எல்ஏ ரகுபதி ஆகியோர் கலந்துகொண்டு கீரமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி பேசினர். அப்போது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளுக்கும் உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் கூட அதற்கான முறையான பதிலும் நிவாரணமும் கிடைக்கவில்லை என திமுக எம்எல்ஏக்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் குற்றச்சாட்டினர்.


× RELATED சாதனையாளர்களுக்கு ராஜகலைஞன் விருது