திருவாரூரில் விஏஓவை தாக்கிய இளைஞர் கைது

திருவாரூர், ஜன. 10: திருவாரூர் விளமல் பகுதியில்  வசித்து வருபவர்  பாலசுப்ரமணியன்  (32 ) .இவர்  திருவாரூர் அருகே உள்ள இலவங்கார்குடி கிராமத்தில் விஏஒ வாக  பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று அந்த பகுதியில் அரசின் கஜாபுயல் நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த உமாநாத் (48) என்பவர் பொருட்களை கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் விஏஓ.வை தாக்கினார். இது குறித்து பாலசுப்பிரமணியன் திருவாரூர் தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாநாத்தை கைது செய்தனர் .மற்றொருவர் கைது: திருத்துறைபூண்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (62). இவர் திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் இருந்துவரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் நேற்று பணியில் இருந்தபோது அதே கிராமத்தை சேர்ந்த தர் (31) என்பவர்ஒரு லிட்டர் பெட்ரோல் கடன் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஜெயபால் மறுப்பு தெரிவிக்கவே ஆந்திரமடைந்த தர் ஜெயபாலை தாக்கி அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார். ஜெயபால் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தரை கைது செய்தனர்.

× RELATED இரவு முழுக்க நடந்த கொடூரம்...