தேசிய அளவிலான சப் ஜூனியர் கபடி போட்டிக்கு கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு

மன்னார்குடி, ஜன. 10: பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள  30 வது சப் ஜூனியர் சிறுமியர் சாம்பியன் பட்ட போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு  கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில 30 வது சப் ஜூனியர் சிறுமியர் சாம்பியன் பட்ட போட்டி கள் கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் திருவாரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதில் இருந்து 31 மாவட்டங் களை சேர்ந்த அணிகள் பங்கேற்றனர். அதில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்ற அணியில் வடுவூரை அடுத்த கட்டக்குடி அரசினர் உயர் நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அட்சயா (15), செளமியா (15) ஆகிய இருவரும் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். அதன் மூலம் தமிழ்நாடு சப் ஜூனியர் சிறுமியர் கபடி அணிக்கு இருவரும் தேர்வு செய்யப் பட்டனர்.  இந்நிலையில் பீகார் மாநிலம் தலைநகர் பாட்னா நகரத்தில் வரும் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை 4 நாட்கள் தேசிய அளவிலான 30 வது சப் ஜூனியர் சிறுமியர் கபடி  சாம்பியன் பட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கட்டக்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அட்சயா (15), செளமியா (15) ஆகிய இரு வரும் விளையாட உள்ளனர்.  தமிழக அணிக்கான பயிற்சி முகாம் 10 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை கோயம்புத்தூர் கற்பகம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில்  மாணவிகளை  வழியனுப்பும் நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா  கட்டக்குடி அரசினர் உயர் நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை யாசிரியர் மனோகரன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜ ராஜேந்திரன் மாணவிகளை பாராட்டி பேசினார். முடிவில் பள்ளிஉடற்கல்வி ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.


× RELATED தேசிய நீச்சல் போட்டிக்கு சிவகங்கை மாணவிகள் தேர்வு