திருவாரூர்- திருப்பூர், பழனிக்கு புதிய பேருந்து சேவை அமைச்சர் துவக்கி வைத்தார்

திருவாரூர், ஜன. 10: திருவாரூரிலிருந்து திருப்பூர் மற்றும் பழனி  ஆகிய ஊர்களுக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் காமராஜ் நேற்று துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருப்பூர் மற்றும் மன்னார்குடியிலிருந்து திருப்பூர் மற்றும்  திருவாரூரிலிருந்து பழனி மற்றும் திருச்சி, நன்னிலத்திலிருந்து நாகை மற்றும் மதுரை என 5 ஊர்களுக்கு புதிய பேருந்து சேவையினை அமைச்சர் காமராஜ் நேற்று திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் கூறுகையில், இந்த 5 பேரூந்துகளும் தலா ரூ 25 லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்கு பேருந்து நிறுத்தம் குறித்து தகவல் தெரிவிக்கும் ஒலிபெருக்கி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் நிர்மல்ராஜ் மற்றும் அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளர் ராஜா, கோட்ட மேலாளர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


× RELATED பழநி சண்முகாநதியில் அமலை செடி அகற்றம்