×

மேலவாசலில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் எம்எல்ஏ டிஆர்பி ராஜா பங்கேற்பு

மன்னார்குடி, ஜன. 10: மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி ஒன்றியத்தில் மக்க ளிடம் செல்வோம், சொல்வோம், வெல்வோம் என்ற கிராம சபை கூட்டத்தை மேலவாசல் ஊராட்சியில்  எம்எல்ஏ டிஆர்பி ராஜா துவக்கி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி ஒன்றியத்தில்  மக்களிடம் செல்வோம், சொல்வோம், வெல்வோம் என்ற ஊராட்சி சபை கூட்டம் மேலவாசல், இடையர் எம்பேத்தி, காரிக்கோட்டை, மூவாநல்லூர், பருத்திக்கோட்டை ஆகிய 5 ஊராட்சிகளில் நேற்று நடை பெற்றது.இதன் துவக்க விழா மேலவாசல் ஊராட்சி முருகன் கோயில் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா தலைமை வகித்தார், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, மன்னை மேற்கு ஒன்றிய செயலாளர் மேலவாசல் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வாசு வரவேற்றார். இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு முதியோர் தொகை இழுத்தடிப்பு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு,   சாலை வசதி, பாலம், புயல் நிவாரணம் முழுமையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட   பல்வேறு குறைகளை கூறி அதற்கு நடவடிக்கை எடுக்க கோரி னர். பொது மக்கள் கூறிய  குறைகளை கேட்டறிந்த பின்  எம்எல்ஏ டிஆர்பி ராஜா பேசுகையில்,  அதிமுக.ஆட்சியில் நடைபெறும்  அவலங்களை விரிவாக  விளக்கி பேசினார். மேலும்  மக்களின் நியாமான கோரிக்கைகளை நிறை வேற்ற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் அரசின் மெத்தனப் போக்கு தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார். முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் நன்றி கூறினார். இதில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மீனாட்சி சூர்யபிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் மகதை பாரதிமோகன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.Tags : MLA ,Panchayat ,DMK ,
× RELATED மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.! எம்எல்ஏ கருணாஸ்