கூத்தாநல்லூர் லட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

நீடாமங்கலம்,ஜன.10: கூத்தாநல்லூர் நகராட்சி லட்சுமாங்குடியில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில்  கூத்தாநல்லூர் தாலுகாவும், நகராட்சியாகவும் இங்குள்ள வெண்ணாறு பாலம் அருகில் மன்னார்குடி ,திருவாரூர், கொரடாச்சேரி-வடபாதிமங்கலம் உள்ளிட்ட நான்குவழி சாலை செல்கிறது.இங்குள்ள சாலைகள் குறுகிய சாலைகளாக உள்ளதால் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் போது கடைகளுக்கு எதிரே இரு சக்கர வாகனங்கள் கூட நிறுத்த முடியாத நிலை உள்ளது.நேற்று லட்சுமாங்குடி பாலத்தில் ஏற்பட்ட   நெரிசலால்  நீண்ட வரிசையில் நின்ற வாகனங்களால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. .இது தொடர்பாக கூத்தாநல்லூர் திமுக நகர செயலாளர் காதர்உசேன் கூறுகையில் தினந்தோறும் காலை மாலை நேரங்களில் இந்த சாலைகளில் அதிக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி,கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் காலத்தில் செல்ல முடியவில்லை..எனவே ஏ.ஆர்.சாலையிலிருந்து அரசு மருத்துவமனைவழியாக ஒரு வழிச்சாலை அமைக்க வேண்டும்  என்ற இந்த கோரிக்கையை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு லட்சுமாங்கடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

× RELATED கரூர் பழைய திண்டுக்கல் சாலையில்...