12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி ,ஜன. 10: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அகிலஇந்திய பொது வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்சங்கத்தினர் தலைமை அஞ்சலகம் முன்பு 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏஐடியூசிமாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் தலைமைவகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை திருத்துறைப்பூண்டி போலீசார் கைது செய்தனர். அதே போல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅகிலஇந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் அஞ்சலக ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர் .


× RELATED ஆர்ப்பாட்டம்