செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

செங்கல்பட்டு, ஜன.10: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பிளான 15 புதிய மருத்துவக்கருவிகளை  பயன்பாட்டுக்கு நேற்று கலெக்டர் திறந்து வைத்தார்.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்₹50 லட்சம் செலவில் டயாலிசிஸ் கருவி, பச்சிளம் குழந்தைகளுக்கான முழு உடல் குளிர்யூட்டும் சிகிச்சை கருவி ஆகியவை மருத்துவமனை உபயோகத்திற்கும் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், மருத்துவக்கல்லூரி டீன் உஷா சதாசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், ஏற்கெனவெ 10 டலாலிசிஸ் கருவிகள் உள்ளன தற்போது மேலும் 5 கருவிகள் வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் மாதம் சுமார் 1500 பேருக்கு சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க முடியும், குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறலை கட்டுப்படுத்தவும், இறப்புகளை தடுக்கவும் இந்த கருவி பயன்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் சுதாகர், கல்லூரி துணை முதல்வர் அனிதா, மருத்துவப்பணிகள் துணை இயக்குனர்கள் பழனி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

× RELATED அத்தியாவசிய உபகரணங்கள் பயன்பாட்டில்...