சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் மான்கள்

மதுராந்தகம், ஜன.10: மேல்மருவத்தூர் அருகே நேற்றுமுன்தினம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் இறந்து கிடந்தது. மேல்மருவத்தூர் - சோத்துப்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில் வாகனம் மோதி மான்கள் இறப்பது அதிகரித்து வருகிறது.
மேல்மருவத்தூர் அடுத்த சோத்து பாக்கத்திலிருந்து வந்தவாசி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ராமாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராம பகுதிகளில் பல நூறு ஏக்கர்களில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளது. இங்கு ஏராளமான மான்கள் வாழ்கின்றன.இவைகள் அவ்வப்போது குடிநீர் மற்றும் உணவை தேடி காட்டுப் பகுதியின் பல இடங்களுக்கு சென்று வரும் நிலையில், அங்குள்ள ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய நெடுஞ்சாலையை தாண்டி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவ்வாறான நிலையில் அவ்வப்போது மான்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது. மேல்மருவத்தூர் அடுத்த அகிலி கிராமம் அருகே நேற்று முன்தினம் அதிகாலையில் புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது. இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் வனத்துறை அலுவலகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடம் வந்து இறந்து கிடந்த மான் உடலை மீட்டு சென்றனர் மேலும் உயிரிழந்த மானின் உடன் பிரேத பரிசோதனை செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

× RELATED பீகாரில் மூளைக்காய்ச்சலால்...