ஆதனூர் ஊராட்சியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

கூடுவாஞ்சேரி, ஜன.10: ஆதனூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டனர்.சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் டிடிசி நகரில் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஆதனூர் ஊராட்சி செயலாளர் தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். முக்கிய நிர்வாகிகள் வீரராகவன், சங்கர், ஜெகராபேகம், ஆனந்தராஜ், சக்ரபாணி, ராஜேந்திரன், இளங்கோ, சுந்தர், விஜயா, கவிக்குமார், சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளர் மலர்விழி தமிழ் அமுதன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட  செயலாளர் தா.மோ.அன்பரசன் , குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்’ என்ற தலைப்பில் லட்சிய முழக்கத்தை முன்வைத்து ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கூட்டத்தில் மகளிர் சுயஉதவிகுழுவினர், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் சாலை, குடிநீர், தெருவிளக்கு, பஸ் வசதி, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மனுக்களை கொடுத்தனர்.இதில், வார்டு செயலாளர்கள் கலீல், ராமதாஸ், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

× RELATED ஆத்தூரில் திமுக சார்பில்...