நிமோகாக்கல் தடுப்பூசி முகாம்

மதுராந்தகம், ஜன.10: அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் நேற்று தமிழக அரசின் நிமோ காக்கல்தடுப்பூசி முகாம் நடைபெற்றது.வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில் நடந்த இந்த முகாமில் அச்சிறுப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் செந்தாமரை, ரேகா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், முதியோர் இல்ல செயலாளர் எஸ்.சங்கர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 இந்த முகாமின் போது 50க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

× RELATED ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரம் லாரி...