கல்லூரி பேராசிரியை வீட்டில் நகை, பத்திரம் கொள்ளை

ஆலந்தூர்,  ஜன.10: மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  வசிப்பவர் நல்லுசாமி. இவரது மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக  பணியாற்றி வருகிறார். தம்பதியினர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல  வேலைக்கு சென்று விட்டனர்.பின்னர், மாலை வீடு திரும்பியபோது  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே  சென்றுபார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 7 சவரன்  தங்க நகை, பத்திரங்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி  அடைந்தனர். பின்னர் இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசில் நல்லுசாமிபுகார்  கொடுத்ததின் பேரில் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில்  பதிவுகளை கொண்டு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

× RELATED தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை