இலவச சைக்கிள் வழங்கும் விழா

பெரும்புதூர், ஜன.10: பெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி வரவேற்றார். மாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் எறையூர் முனுசாமி, முன்னாள் கவுன்சிலர் செந்தில்ராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கலந்து கொண்டு 200 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சிங்கிலிபாடி ராமசந்திரன், மேட்டுப்பாளையம் தயாளன், முன்னாள் கவுன்சிலர் செங்காடு பாபு, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

× RELATED இலவச சைக்கிள் வழங்கும் விழா