×

கலை பொருட்களை உருவாக்கிய டாமன், டையூ மாணவர்கள்

பாகூர், ஜன 10:  மத்திய அரசின் ஒரே பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின் கீழ், புதுச்சேரி அரசு கல்வித்துறையின் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம் டாமன். டையூ யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 38 மாணவர்கள், ஆசிரியர்கள் 3 பேர், ஒருங்கிணைப்பாளர் 2 பேர் என 43 பேர் கொண்ட குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். அவர்கள் பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி, பாகூர் ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற அந்த குழுவினருக்கு, ஓவிய ஆசிரியர் உமாபதியின் மாணவர்கள் 5 பேர், டாமன், டையூ மாணவர்களுக்கு பயனற்ற பொருட்களில் இருந்து கலை பொருட்களை உருவாக்குவது குறித்து பயிற்சி அளித்தனர். தென்னை, பனை, வாழை மரக்கழிவு பொருட்களை கொண்டு, டாமன், டையூ மாணவர்கள் கலை பொருட்களாக உருவாக்கினர். பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர். ஒருங்கிணைந்த கல்வி திட்ட புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னான்டர்ஸ், ஓவிய ஆசிரியர் உமாபதி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


Tags : Damon ,Diu ,
× RELATED ஓபன்ஹெய்மர் – திரைவிமர்சனம்