ஆற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி

புதுச்சேரி,  ஜன. 10: புதுவை, நெல்லித்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (44).  சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி (34) என்ற மனைவியும், 2  குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கம் காரணமாக இவர்களுக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்படவே 2 வருடமாக தம்பதியர் பிரிந்து வாழ்ந்தனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணன் வேலை நிமித்தமாக நோணாங்குப்பம் சென்ற  நிலையில் சுண்ணாம்பாறு பழைய பாலம் அருகே ஆற்றில் மூழ்கிய நிலையில் பிணமாக  கிடந்தார். அவரது உடல் சங்கராபரணி ஆற்றில் மிதப்பதை பார்த்த பொதுமக்கள்  தவளகுப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த போலீசார் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன் சாவுக்கான காரணம்  குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: