சுவர் இடிந்து விழுந்து வாலிபர் சாவு

பூந்தமல்லி, ஜன.10: திருவேற்காடு, சுந்தரசோழபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் கமலேஷ் (20). நேற்று முன்தினம் இரவு கமலேஷ், திருவேற்காடு பஜனை கோயிலில் தெரு வழியாக தனது தாயுடன் நடந்து சென்றார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த மாயாவதி (70), என்பவரது வீட்டின் காம்பவுன்ட் சுவர் திடீரென இடிந்து அவர்
 விழுந்தது.
 இதில், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்து, படுகாயமடைந்த கமலேஷை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கமலேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா்.
தகவலறிந்து திருவேற்காடு போலீசர் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்
கின்றனர்.

× RELATED பாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் மோதி பெண் பலி