மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாப பலி

திருவள்ளூர், ஜன. 10: திருவள்ளூர் அருகே மரம் வெட்ட அலுமினிய ஏணியை எடுத்துச்சென்ற கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் வேலு(46). இவர், நேற்று  பூதூர் பகுதியில் உள்ள மரத்தை வெட்டுவதற்காக அலுமினிய ஏணியை எடுத்துக்கொண்டு சென்றார்.
அப்போது, மின்கம்பி மீது ஏணி உரசியதால் மின்சாரம் பாய்ந்து வேலு தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த அவரை சிகிச்சைக்காக அப்பகுதியினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியில் வேலு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

× RELATED மின்வெட்டால் மக்கள் அவதி