திருவாலங்காடு, மணவாளநகர், மணவூரில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்

சென்னை, ஜன. 10: அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பேரவையில் திமுக எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் கூறினார்.சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவள்ளூர் வி.ஜி. ராஜேந்திரன் (திமுக) கூறியதாவது:திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளி, மணவூர் அரசு மேல்நிைலப் பள்ளியில் கட்டிடங்கள் இல்லை. எனவே அந்த பள்ளிகளில் புதிதாக கட்டிடம் கட்டித் தர வேண்டும். இதே போல மணவாளநகர் பகுதியில் உள்ள கே.எம்.சி, பள்ளி, மணவாள நகர் மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றிலும் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும். இதற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். போதிய கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, மணவாளநகர் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தின் கீழ் 8 வகுப்பறைகள், ஆய்வுக் கூடம், கழிப்பிட அறைகள் கட்டித் தருவதற்கு  அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என்றார்.

× RELATED செங்கம் அருகே வாடகை கட்டிடத்துக்கு...